மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

  •  ½ கிலோ  மட்டன்
  •  ½ கிலோ  சீரக சம்பா அரிசி
  •  ¼ cup எண்ணெய்
  •  1 கப்  தயிர்
  •  4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  •  2 தக்காளி
  •  1 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  •  2 ஏலக்காய்
  •  எலுமிச்சம்
  •  3 ஸ்பூன் நெய்
  •  3 ஸ்பூன்  டால்டா
  •  2 கிராம்பு
  •  2 பெரிய வெங்காயம்
  •  பட்டை சிறிது
  •  உப்பு தேவையான அளவு

மட்டன் பிரியாணி செய்முறை:

            முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியைக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

            பின்னர் பெரிய பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிகொள்ளவும் .

           வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியவுடன் , மட்டன் சேர்த்து வதக்கவும் .

           நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சம் பழ சாறு சேர்த்து, 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்

          தண்ணீர் கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியைப் போடவும்.அரிசி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.அரிசி வெந்ததும் நெய், டால்டா சேர்த்து கிளறி இறக்கவும்.

         ருசியான தலப்பா கட்டு மட்டன் பிரியாணி ரெடி…