சுவையான அவல் மிச்சர் எப்படி சமைப்பது என்று பார்ப்போம்.
அவல் மிச்சர் செய்ய தேவையான பொருட்கள்:
- கருவேப்பில்லை – தேவையான அளவு
- 5 காய்ந்த மிளகாய்
- 1 ஸ்பூன் காய்ந்த திராட்சை
- 1 ஸ்பூன் முந்திரி
- 150 கிராம் அவல்
- 1 ஸ்பூன் வேர்க்கடலை
- ½ ஸ்பூன் சர்க்கரை தூள்
- உப்பு – தேவையான அளவு
- மிளகாய் தூள் – சிறிதளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
அவல் மிச்சர் செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும். அவள் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வருத்தத்தை ஒரு பாத்திரத்தில் அவல் உடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் .
கலந்து வைத்ததுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், சர்க்கரை தூள், அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்போது சுவையான அவல் Mixture தயார்.
