மீன் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

  •  ½ கிலோ  வஞ்சிரம் மீன்
  •  100 கிராம்  வெங்காயம்
  •  உருளைக்கிழங்கு
  •  ½ ஸ்பூன்  சீரகத் தூள்
  •  ½ ஸ்பூன் மிளகாய்தூள்
  •  ½ ஸ்பூன் மிளகுத்தூள்
  •  1 ஸ்பூன் கொத்தமல்லி, புதினா
  •  5 பச்சைமிளகாய்
  •  2 முட்டை
  •  4 ரஸ்க்
  •  ½ ஸ்பூன் எலுமிச்சை சாறு
  •  எண்ணெய் தேவையான அளவு
  •  உப்பு தேவையான அளவு

செய்முறை:

            முதலில் மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

             பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா இலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

            பின்பு இதனை மீன் கலவையில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இந்த கலவையில் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள்,எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

           முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து அகன்ற பாத்திரத்தை உடைத்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

            வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக தட்டி முட்டையில் தோய்த்த பின், ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து பொரிக்கவும்.

            சுவையான மீன் கட்லெட் தயார்.