மாம்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள் :

  • 1  கப் மாம்பழக் கூழ்
  •  ½ கப்  ரவை
  •  1 ஸ்பூன்  ஏலக்காய்த்தூள்
  •  ½ கப்  சர்க்கரை
  •  3 ஸ்பூன்  பொடியாக நறுக்கிய முந்திரித் துண்டுகள்
  •  ½ கப்  நெய்

மாம்பழ அல்வா செய்முறை: 

            அடுப்பில் கெட்டியான வாணலியை வைத்து சிறிது நெய் விட்டு சூடாக்கி, ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

            வாணலியில் சர்க்கரையைப் போட்டு, தண்ணீர் சேர்த்து கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்

            வறுத்த ரவையை அதில் சேர்த்து வேகும் வரை கிளறி, மாம்பழக் கூழ், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஊற்றி வேகவிடவும்

            நெய் பிரிந்து வரும்போது இறக்கி, முந்திரி சேர்க்கவும்.

            சுவையான மாம்பழ அல்வா தயார்