கேரளா ஸ்டைல் இடியாப்பம் மிகவும் எளிமையானது  வாங்க செய்யலாம்

இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

  •   தேங்காய்- 1 கப்
  •  இடியாப்ப மாவு- 1 கப்
  •  எண்ணெய் – தேவையான அளவு
  •  தண்ணீர்- 1 கப் 
  •  உப்பு – தேவையான அளவு

இடியாப்பம்செய்முறை:

            பின்னர் ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

            பின்பு இடியாப்ப அச்சில் எண்ணெயை தடவி, பின் பிசைந்து வைத்துள்ள மாவை, இட்லி தட்டில் பிழிய வேண்டும்.

            அடுத்து இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேல் பிழிந்து வைத்துள்ள இட்லி தட்டை வைத்து,

            பின்பு துருவிய தேங்காயை தூவி, இட்லி பாத்திரத்தை 10 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும்.

           

இப்போது சுவையான கேரளா ஸ்டைல் இடியாப்பம் ரெடி!!! இதனை சர்க்கரை மற்றும் தேங்காய் பாலுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.