தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது . ஜீன்7 முதல் ஜீன்14 ஆம் தேதி காலை 6மணி வரை தளர்வுகளோடு ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது . கோவை , நீலகிரி , திருப்பூர் , ஈரோடு , சேலம் , கரூர் , நாமக்கல் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை ஆகிய 11மாவட்டங்களில் மட்டும் தொற்று குறையாததால் , அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . 11 மாவட்டங்களில் மளிகை , பல சரக்கு காய்கறி கடைகள் , மீன் கடைகள் , நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 வரை செயல்படும் . மீன் சந்தைகளை திறந்த வெளியில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் . இறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது . தீபெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் . பத்திர பதிவுகள் செய்ய 50 சதவீத டோக்கன்கள் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருவதால் 11 மாவட்டங்களில் அறிவித்த தளர்வுகளோடு , கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது .