


சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 படுக்கை ஆக்சிஜசன் வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள் ,சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர் ஆக்சிஜன் குழாய் இணைப்பையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கூடுதலாக 500 படுக்கையில் கொண்ட சிகிச்சை மையத்தை 10 நாட்களுக்குள் ஏற்படுத்த உத்தரவிட்டார்.முதலமைச்சர் ஆய்வின் போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உடனிருந்தனர்.
