தமிழகத்தில் மதுரை,விருதுநகர்,சேலம்  உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்களை  இடமாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த ஆணையின்படி திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராகப் பணியாற்றி வந்த டாக்டர்.வள்ளி சத்தியமூர்த்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சேலத்தில் இருந்த டீன் டாக்டர்.முருகேசன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.