சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி &  மருத்துவமனையில் கொரானா தடுப்பு மருந்தான ரெம்டெசிவர்  கள்ளத்தனமாக தனியார் மருத்துவமனைக்கு விற்கப்படுவதாக மாவட்டம் முழுவதும் பரபரப்பாக செய்தி பரவ நம்ம சேலம் செய்தியாளர்கள் மருத்துவமனை முதல்வர் Dr.R.முருகேசன் அவர்களை நேரடியாக சந்தித்து இதுபற்றி உண்மை நிலை அறிய வினவியபோது இதுவரை ஆதாரத்தோடு புகார் எதுவும் வரவில்லை எனவும் ஆதாரத்தோடு புகார் கொடுத்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என கூறியதோடு கொரானா தடுப்பூசி சம்பந்தமான ஒதுக்கீடுகள் மற்றும் அனைத்து நடைமுறைகளும் பொது சுகாதார அதிகாரிகளால் மட்டுமே பகிர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.மேலும் தற்போதைக்கு கொரானா தடுப்பூசி தேவையான அளவு மருத்துவமனையில் இருப்பதாகவும் பற்றாக்குறை சூழல் எதுவுமில்லை எனவும் இனி இதுபோல் ஏதும் முறைகேடுகள் நடைபெறாமல்  இருக்க வரும் காலங்களில் கொரானா மருந்து  செலுத்தியபின் காலி குப்பிகளை சேகரித்து வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும்  கூறினார்.கடந்த காலங்களில் மருத்துவமனைகளில் பணியாற்றும் முன் களப்பணியாளர்கள் கொரானா சிகிச்சை பணியில் ஈடுபட்டு பின் மருத்துவமனை மற்றும் தனியார் விடுதிகளில் பணியாளர்களை தனிமைப்படுத்தி உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் செலுத்திய பின்பு மருத்துவ பரிசோதனை செய்து பின் மீண்டும் பணியமர்த்தும் நிலை இருந்து வந்தது தற்போது அந்த நிலை இல்லாததால் மருத்துவமனை பணியாளர்கள் அச்சப்படும் நிலை உள்ளதா சார் என வினவியபோது இதற்கு முன் அந்த நிலை இருந்தது உண்மைதான் ஆனால் தற்போது அரசின்  நடைமுறை உத்தரவுகள் மாறி மாறி வருவதால் அரசு உத்தரவு படி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது எனவும் இது போல் முன் களப்பணியாளர்கள் அச்சப்படுவதாக எவ்வித புகாரும் எனது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை எனவும் கூறினார்.