மீன் வறுவல் தேவையான பொருட்கள்:
- மீன் – 8 துண்டுகள்
- 12 ஸ்பூன் மிளகு தூள்
- ¾ ஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 ஸ்பூன் வெண்ணெய்
- 2 ஸ்பூன் மைதா மாவு
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- ¾ ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- 1 ஸ்பூன் தயிர்
- உப்பு தேவையான அளவு
- 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு
மீன் வறுவல் செய்முறை:
மீனை நன்கு கழுவி, அதில் கருமிளகு தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், கொத்தமல்லித் தூள், வெண்ணெய், மைதா மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும்.
இப்போது சுவையான மீன் வறுவல் தயார்.. இந்த மீன் வறுவல் சாம்பார் சாதம், குருமா, தனியாக சாப்பிடவும் சுவையாக இருக்கும் சுவைத்து மகிழவும்…
