சைனீஸ் சிக்கன் நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

  •  2 கப்  மாவு
  •  3 முட்டை
  •  300  கிராம் சிக்கன்
  •  ½ கப்  Bread crumbs
  •   கப்  Parmesan Cheese
  •  1 ஸ்பூன் மிளகாய் தூள்
  •  1 ஸ்பூன்  Cayenne pepper powder
  •  Egg wash
  •  ½ கப்  வெங்காயம்
  •  ½ கப் கேரட்
  •  ½ கப்  Scallion
  •  ½ கப்  Bok Choy
  •  1 ஸ்பூன்  சோயா சாஸ்
  •  1 ஸ்பூன்  Oyster sauce
  •  1 ஸ்பூன்  Sesame oil
  •  3 ஸ்பூன்  Cooking oil (For Fried chicken)
  •  1 ½ ஸ்பூன்  Cooking oil (For Stir-fry Noodles)
  •  Salt and pepper for seasoning

 சைனீஸ் சிக்கன் நூடுல்ஸ் செய்முறை:

பெரிய மேஜையில் மாவு கொட்டி. அதில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றவும். மாவை ஒரு பெரிய பந்து அளவிற்குப் பிசையவும்.

மாவை 20 நிமிடங்கள் ஆறவிடவும், பின்பு வட்ட வடிவில் உருட்டி கொள்ளவும்,

பிறகு மேலும் கீழுமாக அந்த மாவை மடித்து கொள்ளவும். மடித்து அந்த மாவை நூடுல்ஸ் போன்று மெலிதாகவும் நீளமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி தண்ணி சூடானதும் தயார் செய்த நூடுல்சை சேர்த்து 3 முதல் 4 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

பிறகு கோழி மார்பகத்தை ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் வெட்டி எடுக்கவும். வெட்டி எடுத்ததும் இறைச்சியை ஒரு கவரில் போட்டு லேசாக தட்டவும்.

பிறகு அந்த இறைச்சியை மாவில் தொட்டு எடுக்கவும் பின்பு முட்டையின் மஞ்சள் கருவில் தொட்டி எடுக்கவும்.

பின்பு ஒரு கிண்ணத்தில் ரொட்டி துண்டுகள், மிளகாய் தூள், மிளகு,Cayenne pepper powder, பர்மேசன் சீஸ்,மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.

இப்போது தயாரித்த கலவையுடன் இறைச்சித் துண்டை லேசாகத் தொட்டு எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுக்கவும்.

ஒரு பெரிய கடாயை சூடாக்கி எண்ணெய், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய Scallion, நறுக்கிய கேரட், Bok Choy மற்றும் சமைத்த நூடுல்ஸைச் சேர்த்து சிறிது நேரம் நன்றாக கிளறவும்.

பிறகு உப்பு மிளகு சோயா சாஸ், Oyster sauce, Sesame oil, அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி தட்டில் எடுத்து வைக்கவும்.

நூடுல்ஸை பரிமாறும் தட்டுக்கு மாற்றவும். வருத்த கோழி இறைச்சியை நீளமான துண்டுகளாக வெட்டி தட்டின் ஓரத்தில் வைத்து ஸ்காலியன் கொண்டு அலங்கரித்து உடனடியாக பரிமாறவும்.