Bread Halwa செய்ய தேவையான பொருட்கள்:
- வறுத்த திராட்சை – தேவையான அளவு
- வறுத்த முந்திரி – தேவையான அளவு
- ஏலக்காய்த் தூள் சிறிதளவு
- 100 g சர்க்கரை தூள்
- 6 பிரெட்
- 2 ஸ்பூன் நெய்
- 4 பேரிச்சம்பழம்
- 50 ml பால்
Bread Halwa செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் நெய், சிறு துண்டுகளாக வெட்டிய பிரெட் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
அதே கடாயில் சர்க்கரை தூள், தண்ணீர், ஏலக்காய் தூள், வறுத்து வச்ச பிரெட் துண்டுகளை சேர்க்கவும்.
அனைத்தையும் சேர்த்து விட்டு நன்றாக வறுக்கவும் பிரெட் துண்டுகள் கூழாக ஆகும்வரை. பின்பு 50ml பால் சேர்க்கவும்.
அடுத்து வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும், கடைசியாக பேரிச்சம்பழம் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
இப்போது சுவையான பிரெட் அல்வா தயார்…
