கம்பு அடை செய்ய தேவையான பொருட்கள்:
- ½ கப் கம்பு
- ½ கப் கடலை பருப்பு
- ¼ கப் உளுத்தம் பருப்பு
- ¼ கப் துவரம் பருப்பு
- 1 வெங்காயம்
- 1 கப் முட்டைகோஸ்,பொடியாக நறுக்கியது
- 8 சிகப்பு மிளகாய்
- இஞ்சி சிறு துண்டு -1
- ¼ ஸ்பூன் பெருங்காயம்
- கறிவேப்பிலை
- கடுகு
- எண்ணெய்
- உப்பு
கம்பு அடை செய்முறை:
பருப்பு, கம்பு, ஒன்றாக களைந்து குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
முதலில் மிக்சியில் மிளகாய், பெருங்காயம், உப்பு, இஞ்சி சேர்த்து பொடிக்கவும்.
பின்பு ஊறிய பருப்பு, கம்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கம்பு அரைப்பட வேண்டும்.
கடுகு பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, மாவில் சேர்த்து, முட்டைகோஸ் சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லை சூடு செயது, சிறு துளி என்னை தடவி, ஒரு கரண்டி மாவை பரப்பி, மிதமான தீயில் மூடி வேகா விடவும். திருப்பி போட்டு, சிவக்கும் வரை வேகவைத்து சுட்டு எடுக்கவும்.
மாவை அரைத்ததுமே அடை செய்யலாம், அல்லது, ஓரிரு மணிநேரம் கழித்தும் செய்யலாம். அதற்க்கு மேலே பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
