காஞ்சிபுரம் உப்புமா தேவையான பொருட்கள்:
- 1 கப் ரவை – ஒரு கப்
- 3 பச்சை மிளகாய்
- இஞ்சி ஒரு சிறு துண்டு
- 2 ஸ்பூன் தேங்காய் துருவல்
- சாம்பார் வெங்காயம் ( 10 – 15)
- மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் எண்ணெய் + நெய்
- 1 ஸ்பூன் மிளகு
- கடுகு, சீரகம்
- 10 முந்திரி
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுந்து
- கறிவேப்பிலை
- உப்பு
காஞ்சிபுரம் உப்புமா செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
பின் முந்திரி சேர்த்து சிவந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும்.
2 – 2 1/2 கப் அளவு நீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
கொதிக்கும் நீரில் ரவையைக் கொட்டி கிளறி மூடிவிட்டு மிதமான தீயில் வைத்து வேக விடவும். விரும்பினால் மேலே சிறிது நெய் விடவும்.

சுவையான காஞ்சிபுரம் உப்புமா தயார்.
