இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே மொறுமொறுப்பான மென்மையான கேக்கை ரெடி பண்ணி விட முடியும். அதிலும் குழந்தைகளுக்கு இந்த கேக் பாப்ஸ் மிகவும் பிடித்தமான ஒன்று. எனவே உங்கள் குழந்தைகளின் பர்த்டே பார்ட்டி, ஸ்கூல் ஸ்நாக்ஸ் போன்றவற்றிற்கு கூட இதை நீங்கள் செய்து கொடுக்கலாம்.கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது.
கேக் பாப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்
- 1 Numbers சாக்லேட் ஸ்பான்ஞ்
- 1/2 கப் சாக்லேட் சிரப்
- 3 தேக்கரண்டி கேக் கிரீம்
- 2 Numbers தூளாக்கப்பட்ட முழு கோதுமை பிஸ்கட்
- தேவையான அளவு சாக்லேட் சிப்ஸ்
- தேவையான அளவு வண்ணமயமான தெளிப்பான்
கேக் பாப்ஸ் செய்முறை :
சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை தூளாக நொறுக்கி கொள்ளுங்கள். அதனுடன் அடித்த க்ரீம், பவுடராக்கிய பிஸ்கட் தூள் சேர்த்து மாவு மாதிரி பிசைந்து கொள்ளுங்கள். மாவு உலர்ந்த தன்மையில் இருந்தால் கூட கொஞ்சம் க்ரீம் சேர்த்து கொள்ளுங்கள்.
இப்பொழுது பிசைந்த மாவை சிறு சிறு பந்துகளாக உருட்டி ஒரமாக வையுங்கள். இப்பொழுது லாலி பாப் ஸ்டிக்கை எடுத்து அந்த பந்தில் சொருகி உருக்கிய சாக்லேட்டில் முக்கி எடுங்கள்.
இந்த லாலிபாப் ஸ்டிக்கை பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து குளிரூட்டுங்கள்.
இப்பொழுது குளிரூட்டிய சாக்லேட் ஸ்டிக்கை எடுத்து மறுபடியும் மெல்ட்டடு சாக்லேட்டில் முக்கி அதன் மேல் கலர்புல்லான ஸ்பிரிங்கிள்ஸ்ஸை தூவுங்கள். பிறகு அப்படியே அதை ஒரு தட்டில் வைத்தோ அல்லது அழகாக பர்த்டே டேபிளில் வரிசையாக குத்தி வைத்தோ அழகுபடுத்துங்கள் டேஸ்டியான கேக் பாப்ஸ் லாலிபாப் ரெடி. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
