இனிய மாட்டு பொங்கல் 

திருவள்ளுவர் தின

ஔவையார் தின

நல் வாழ்த்துக்கள்

*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2051_*

*_தை 02_*

*_16.01.2020_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தொழில் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். கால்நடைகளை வைத்து பாராமரிப்பவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : அனுசரித்து செல்லவும்.

பரணி : மேன்மையான நாள்.

கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் சாதகமான சூழல் உண்டாகும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். இறைவழிபாடுகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : கனிவு வேண்டும்.

ரோகிணி : அங்கீகாரம் கிடைக்கும்.

மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தாயின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் உண்டாகும். சுயதொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : முன்னேற்றம் ஏற்படும்.

திருவாதிரை : கலகலப்பான நாள்.

புனர்பூசம் : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

தாய்வழி உறவினர்களிடம் செல்வாக்கு உயரும். பணியில் நிம்மதியான சூழல் உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட்டு புதிய செயல் திட்டங்களை வகுப்பீர்கள். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : செல்வாக்கு உயரும்.

பூசம் : வாய்ப்புகள் ஏற்படும்.

ஆயில்யம் : மாற்றங்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

நண்பர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பொதுச்சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.

பூரம் : கவனம் வேண்டும்.

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

கலைஞர்களுக்கு திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பணிகளில் பொறுப்புகள் உயரும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். உடன்பிறப்புகளால் ஆதாயமான சூழல் ஏற்படும். பொன், பொருள்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் அமையும்.

அஸ்தம் : பொறுப்புகள் உயரும்.

சித்திரை : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மிக யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். அந்நியர்களால் தொழிலில் முன்னேற்றமான நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : ஆசிகள் கிடைக்கும்.

சுவாதி : அனுகூலமான நாள்.

விசாகம் : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தொழிலில் புதிய முதலீடுகளின் மூலம் அபிவிருத்தி உண்டாகும். தலைமை பதவியில் உள்ளவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : அபிவிருத்தி உண்டாகும்.

பூராடம் : மனக்கவலைகள் நீங்கும்.

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

எதிர்காலம் சம்பந்தமான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவீர்கள். தொழில் சம்பந்தமான பயண அலைச்சல்களுக்கான வாய்ப்புகள் உண்டாகும். வாகனப் பராமரிப்பால் சில விரயங்கள் உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

திருவோணம் : விரயங்கள் உண்டாகும்.

அவிட்டம் : கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

நிர்வாகத்தில் செய்யும் திடீர் மாற்றங்களால் கீர்த்தி உண்டாகும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

சதயம் : வாய்ப்புகள் ஏற்படும்.

பூரட்டாதி : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். வாக்குவாதத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. எதிர்பார்த்த தன வரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : நிதானம் தேவை.

அனுஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.

கேட்டை : காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுத்திறமையால் புகழ் உண்டாகும். தடைபட்ட வேலைகளை முனைப்புடன் செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சம்பந்தமான கல்வியில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.

உத்திரட்டாதி : புகழ் உண்டாகும்.

ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•