*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆடி 22_*
*07.08.2019*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
நண்பர்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குறுகிய தூர பயணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : தன்னம்பிக்கை மேம்படும்.
பரணி : பாராட்டப்படுவீர்கள்.
கிருத்திகை : திருப்தியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பொருளாதார மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகள் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக செயல்படவும். புதிய நபர்களின் ஆதரவால் தனவரவு உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்க வேண்டிய கடன் உதவிகள் கிடைக்கும். எதிலும் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
ரோகிணி : வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிடம் : தனவரவு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். புதியவர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்களிலிருந்து தெளிவு பிறக்கும். உடல் தோற்றப் பொலிவிற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன் நிறம்
மிருகசீரிடம் : பொறுப்புகள் மேம்படும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : தோற்றப் பொலிவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வாகனப் பயணங்களால் அலைச்சல்களும், உடல் சோர்வும் ஏற்பட்டு மறையும். உறவினர்களிடம் சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும். நீண்ட நாட்களாக உள்ள பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு முடிப்பீர்கள். தம்பதிகளுக்கிடையே விட்டுக் கொடுத்து செல்லவும். தாயுடன் தேவையில்லாத வாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : வாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தடைபட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றமான சூழலை உருவாக்கும். கடல் வழி பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதால் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரம் : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
எதிர்பாராத தனவரவுகளால் மேன்மையான சூழல் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : மேன்மையான நாள்.
அஸ்தம் : பிரச்சனைகள் நீங்கும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
உத்தியோகத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் உண்டாகும். கடல் மார்க்க பயணங்களால் இலாபகரமான செய்திகள் வந்தடையும். பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். அனைவரிடத்திலும் மரியாதைகள் உயரும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : அங்கீகாரம் கிடைக்கும்.
சுவாதி : இலாபகரமான நாள்.
விசாகம் : மரியாதைகள் உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
அருள்தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முயற்சிகளால் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : அபிவிருத்தி உண்டாகும்.
கேட்டை : புரிதல் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பொன், பொருள் சேர்க்கையினால் மகிழ்ச்சி உண்டாகும். கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகளின் மூலம் இலாபம் உண்டாகும். சுப காரியம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : கீர்த்தி உண்டாகும்.
பூராடம் : இலாபம் உண்டாகும்.
உத்திராடம் : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்கவும். அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளால் குழப்பமான சூழல் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : குழப்பமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சுய தொழில் சார்ந்த எண்ணங்களும், முயற்சிகளும் மேம்படும். இனிய செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அவிட்டம் : மாற்றமான நாள்.
சதயம் : செல்வாக்கு மேம்படும்.
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
செய்யும் பணிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். தாய்வழி உறவுகளிடம் சூழலுக்கு தகுந்தாற்போல் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். சக ஊழியர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் :பிங்க் நிறம்
பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
ரேவதி : அமைதி வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
