*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆடி 23_*
*08.08.2019*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
புதிய வேலை தேடுபவர்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அசுவினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
சொத்து பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். உயர் கல்விக்கான முயற்சிகள் சாதகமான பலன்களை தரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அமைதி வேண்டும்.
ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
மகான்களின் தரிசனம் கிடைக்கும். கூட்டாளிகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தர்ம ஸ்தாபனங்களின் மூலம் சுபச் செய்திகள் வரும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு வேலைப்பளுவினால் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
திருவாதிரை : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
புனர்பூசம் : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
பூர்வீக சொத்துக்களால் இலாபம் அடைவீர்கள். உன்னத செயல்களின் மூலம் நற்பெயர்கள் வந்தடையும். பிள்ளைகளால் சுப விரயம் உண்டாகும். பயணங்களால் இலாபம் ஏற்படும். தந்தைவழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் குறையும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : இலாபகரமான நாள்.
பூசம் : விரயம் உண்டாகும்.
ஆயில்யம் : சிக்கல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். கல்வி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வீர்கள். கடித போக்குவரத்தினால் அனுகூலமான சூழல் உண்டாகும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை ஏற்படும். தலைமை பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : மந்தத்தன்மை உண்டாகும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
இளைய சகோதரர்களின் உதவியால் சுபச் செய்திகள் வந்து சேரும். புதிய தொழிலை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குவன்மையால் பொருட்சேர்க்கை உண்டாகும். வாகனங்களை கொண்டு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : சுபச் செய்திகள் வரும்.
அஸ்தம் : தனவரவு உண்டாகும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
உறவுநிலைகளால் மாற்றமான சூழல் உண்டாகும். போட்டிகளின் மூலம் இலாபம் அடைவீர்கள். அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்-வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : இலாபம் உண்டாகும்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
வேள்விகளில் கலந்துக் கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். அயல்நாட்டு தொழில் வாய்ப்புகளால் சேமிப்பு உயரும். உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீலம்
விசாகம் : உபதேசம் பெறுவீர்கள்.
அனுஷம் : சேமிப்பு உயரும்.
கேட்டை : புரிதல் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
கணவன் மனைவிக்கிடையே உள்ள வேற்றுமை நீங்கி ஒற்றுமை மேலோங்கும். மூத்த சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். புதிய கலைகளில் ஆர்வம் ஏற்படும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஒற்றுமை மேலோங்கும்.
பூராடம் : ஆர்வம் ஏற்படும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் வரும். சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வங்கிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : புகழப்படுவீர்கள்.
திருவோணம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
அவிட்டம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். வெளிநாட்டு பயணங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் வரவால் பொருளாதாரம் மேம்படும். புண்ணிய காரியங்களுக்கு உதவுவீர்கள். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன் நிறம்
அவிட்டம் : மனம் மகிழ்வீர்கள்.
சதயம் : பொருளாதாரம் மேம்படும்.
பூரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் சற்று அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : அமைதி காக்கவும்.
உத்திரட்டாதி : மேன்மையான நாள்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
