*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆனி 17_*
*02.07.2019*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். துணிச்சலுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். அனுபவ அறிவு மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : மனக்கசப்புகள் நீங்கும்.
பரணி : அறிவு மேம்படும்.
கிருத்திகை : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
அரசாங்கம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். தொழில் போட்டிகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரோகிணி : இலாபம் உண்டாகும்.
மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் புதிய திட்டங்களால் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சகோதரர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : இலாபம் அதிகரிக்கும்.
திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகஸ்தரர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம். வியாபாரத்தில் புதிய நபர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : மேன்மையான நாள்.
பூசம் : அமைதி காக்கவும்.
ஆயில்யம் : ஆசைகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உங்களின் செல்வாக்கும், மதிப்பும் உயரும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : பிரச்சனைகள் நீங்கும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
உத்தியோகஸ்தரர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பணி சம்பந்தமான பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
எடுத்த காரியத்தில் இருந்த இடர்பாடுகள் விலகும். வியாபாரத்தில் தனவரவுகள் மேம்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : இடர்பாடுகள் விலகும்.
சுவாதி : தனவரவு மேம்படும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சற்று அனுசரித்து செல்லவும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். உடமைகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
சக ஊழியர்களிடம் நற்பேறுகள் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூமிவிருத்தி உண்டாகும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : நற்பேறுகள் கிடைக்கும்.
பூராடம் : இலாபம் அதிகரிக்கும்.
உத்திராடம் : அபிவிருத்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தாய்வழி உறவுகளால் மனக்கசப்புகள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் உயரும். சொத்து விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : மனக்கசப்புகள் ஏற்படலாம்.
திருவோணம் : விவேகம் வேண்டும்.
அவிட்டம் : பொறுப்புகள் உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். திறமைக்கேற்ப பணி உயர்வு உண்டாகும். ஆன்மீக பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : பணி உயர்வு கிடைக்கும்.
பூரட்டாதி : சுபச் செய்திகள் வரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேம்படும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். குடும்பத்தில் பொறுப்புகள் உயரும். மறைந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களின் நினைவாற்றல் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் மேம்படும்.
உத்திரட்டாதி : பிரச்சனைகள் தோன்றி மறையும்.
ரேவதி : ஆதாயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
