*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_சித்திரை 22_*

*05.05.2019*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

நண்பர்களால் தொழில் சம்பந்தமான வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களால் சாதகமான சூழல் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளை சுமூகமான முறையில் பேசி முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
கிருத்திகை : பேச்சில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் கவனம் வேண்டும். இன்பச் சுற்றுலாக்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். தந்தையிடம் அனுசரித்துச் செல்லவும். எண்ணிய கடனுதவிகள் கிடைக்கும். பெண் ஊழியர்களிடம் சற்று கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

கிருத்திகை : முடிவுகளில் கவனம் வேண்டும்.
ரோகிணி : பொருளாதாரம் மேம்படும்.
மிருகசீரிடம் : ஊழியர்களிடம் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடைமைகளை கவனத்துடன் வைத்துக்கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அமைதிப்போக்கினை கடைபிடிக்கவும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

மிருகசீரிடம் : கடன்கள் தீரும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : இன்பமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். வாகனங்களால் எதிர்பார்த்த தொழில் இலாபம் உண்டாகும். பொருட்சேர்க்கையால் சேமிப்பு உயரும். கால்நடைகளால் எண்ணிய இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
ஆயில்யம் : சேமிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தொழிலில் இருந்த பழைய பாக்கிகளை வசூலிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் சார்ந்த துறைகளில் உங்களின் மதிப்பு உயரும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். இளைய சகோதரர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மகம் : ஒற்றுமை உண்டாகும்.
பூரம் : முயற்சிகள் ஈடேறும்.
உத்திரம் : மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் விரயச் செலவுகள் உண்டாகும். செய்யும் பணிகளில் விமர்சனங்கள் ஏற்படும். பிறருக்கு உதவும்போது மிகுந்த கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : மாற்றங்கள் உண்டாகும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

வேலை செய்யும் இடங்களில் எதிர்பாராத உயர் பதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். பணிகளில் எதையும் செய்வதற்கான சுதந்திரம் கிடைக்கும். எண்ணிய காரியங்களை திட்டமிட்டப்படி செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய நபர்களை வேலைக்கு அமர்த்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

சித்திரை : உயர்வான நாள்.
சுவாதி : புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
விசாகம் : வெற்றிகரமாண நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழிலில் பிள்ளைகளின் ஆதரவுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : ஆதரவான நாள்.
கேட்டை : சிந்தித்துச் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உயர் அதிகாரிகளின் ஆதரவுகளால் தொழிலில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார மேன்மைக்கான செயல்திட்டங்களால் எண்ணிய பலன்கள் உண்டாகும். வாக்குவன்மையால் மேன்மையான சூழல் அமையும். எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : சுபமான நாள்.
பூராடம் : மேன்மையான சூழல் அமையும்.
உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தொழில் சம்பந்தமான முடிவுகள் சாதகமான பலன்களை அளிக்கும். அதிகாரப் பதவியில் இருப்போரின் அறிமுகம் கிடைக்கும். உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் அனுகூலமான செயல்கள் உண்டாகும். நீர்வழி தொழிலால் இலாபம் உண்டாகும். தொழில் தொடர்பான நுட்ப அறிவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சுபமான செய்திகள் கிடைக்கும். பணிகளில் மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். தொழிலில் நீங்கள் செய்யும் சிறு மாற்றம் புதுவிதமான அனுபவத்தை அளிக்கும். வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
சதயம் : நற்செய்திகள் கிடைக்கும்.
பூரட்டாதி : புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பணிபுரியும் இடங்களில் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். சுப நிகழ்ச்சிகள் காரணமாக அலைச்சல்கள் உண்டாகும். உறவுகளிடம் கவனம் தேவை. பொருளாதார முன்னேற்றம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். பணிகளில் உள்ள காரியத் தடைகளை களைவீர்கள். எதையும் சமாளிக்கும் திறமை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

பூரட்டாதி : உறவுகளிடம் கவனம் தேவை.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
ரேவதி : காரியத் தடைகள் நீங்கும்.

  1. •┈┈•❀??????❀•┈┈•