*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_சித்திரை 23_*

*_06.05.2019_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். அறச்செயல்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அமைவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : நற்பேறு கிடைக்கும்.
பரணி : மனக்கசப்புகள் குறையும்.
கிருத்திகை : பதவி உயர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கலைஞர்களுக்கு திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : புகழ் உண்டாகும்.
ரோகிணி : விவாதங்களில் வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். அனுகூலமான சூழல் அமையும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். பயணங்களில் கவனத்துடன் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : செயல்பாடுகளில் கவனம் தேவை.
திருவாதிரை : தனலாபம் கிடைக்கும்.
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

புதிய நபர்களின் அறிமுகம் சாதகமாகும். சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். பயணங்களால் இலாபம் கிடைக்கும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
பூசம் : பேச்சுகளால் இலாபம் உண்டாகும்.
ஆயில்யம் : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். பொருளாதார மேம்பாட்டிற்கான சிந்தனைகள் தோன்றும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் : சிந்தனைகள் மலரும்.
உத்திரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். ஞான உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

உத்திரம் : புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அஸ்தம் : கீர்த்தி உண்டாகும்.
சித்திரை : குழப்பங்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

சம வயதினரிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பணிச்சுமை அதிகரிக்கும். கடல் மார்க்க பணிகளில் மந்தமான இலாபம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பிறரின் ஆலோசனைகளை கேட்டு புதிய முடிவுகளை எடுக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.
சுவாதி : பணியில் கவனம் தேவை.
விசாகம் : பணிச்சுமை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். இறை வழிபாட்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : சுபச் செலவுகள் உண்டாகும்.
அனுஷம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
கேட்டை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சுயதொழில் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். போட்டியில் வெற்றி கிடைக்கும். பயணங்கள் சம்பந்தமான விரயச் செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : போட்டியில் வெற்றி கிடைக்கும்.
பூராடம் : விரயச் செலவுகள் உண்டாகும்.
உத்திராடம் : ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உறவுகளால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். கல்வி சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய வீடுகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : உறவுகளால் நன்மை உண்டாகும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

புதிய முயற்சிகளில் காரியத் தடங்கல்கள் உண்டாகும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பணச் சிக்கல்கள் நீங்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். பெரியோர்களிடம் அமைதியுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : முடிவுகளில் நிதானம் தேவை.
சதயம் : பணச் சிக்கல்கள் நீங்கும்.
பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : சாதகமான சூழல் அமையும்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : பயணங்களில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•