*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 27_*
*_11.03.2019_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான நிலை உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : சிக்கல்கள் குறையும்.
பரணி : ஆதாயம் கிடைக்கும்.
கிருத்திகை : இலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
உறவுகளிடம் நிதானம் வேண்டும். சேமிப்பு அதிகரிக்கும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்கநிலை நீங்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : சேமிப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். உங்களின் முயற்சியால் சேமிப்பு அதிகரிக்கும். கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிருகசீரிடம் : புதிய நட்பு கிடைக்கும்.
திருவாதிரை : சேமிப்பு உயரும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் இலாபம் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும். கால்நடைகளால் இலாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
ஆயில்யம் : தனலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். அறக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். வாதம் புரிதலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : சுபச் செய்திகள் வரும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் ஈடுபட்டோர்க்கு எண்ணிய முடிவு கிடைக்க காலதாமதமாகும். நண்பர்களிடம் வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது. செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். சுபச் செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : வாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : கவனமாக இருக்கவும்.
சித்திரை : சுப விரயங்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
தொழில் சம்பந்தமான முக்கிய நபரை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
சம வயதினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனைவியிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் காவி நிறம்
விசாகம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.
கேட்டை : ஆசைகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
புதிய சிந்தனைகள் மேலோங்கும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருத்தல் வேண்டும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அதிகரிக்கும். நீண்ட கால உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திராடம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவினால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : இலாபம் அடைவீர்கள்.
திருவோணம் : மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனை விவகாரங்களில் இருந்த சிக்கல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : சிக்கல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தலைமை பதவியில் உள்ள அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். செய்யும் பணியில் சற்று கவனத்துடன் செயல்படவும். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்லவும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : பணிகளில் கவனம் தேவை.
ரேவதி : அனுசரித்துச் செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
