*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஐப்பசி 11_*
*_28.10.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் காரியத் தடங்கல்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : நட்பு கிடைக்கும்.
பரணி : அன்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : செயல்பாடுகளில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
கூட்டாளிகளின் உதவியால் புதிய தொழிலை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வழக்காடுவதில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். உறவுகளின் வருகையால் மகிழ்ச்சியும், செல்வாக்கும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.
ரோகிணி : எண்ணங்கள் மேலோங்கும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
உடன்பிறப்புகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். எண்ணிய முயற்சிகளில் சில காரியத் தடங்கல்கள் உண்டாகலாம். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத கடனுதவிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் வேண்டும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிடம் : செயல்களில் காலதாமதம் உண்டாகும்.
திருவாதிரை : வெற்றி கிடைக்கும்.
புனர்பூசம் : சாதகமான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
அரசாங்க அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் கிடைக்கும். பூமி விருத்திக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய கீர்த்தி உண்டாகும். சுபச் செயல்கள் கைகூடும். செலவுகள் குறைந்து சேமிப்பு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
பூசம் : காரிய சித்தி உண்டாகும்.
ஆயில்யம் : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தந்தையின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
செய்தொழிலில் மேன்மை உண்டாகும். துரிதமான செயல்பாடுகளால் கீர்த்தி உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பணிகளில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். இறை வழிபாட்டில் நம்பிக்கை மேலோங்கும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : கீர்த்தி உண்டாகும்.
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மனைவியின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு அதிகாரிகளிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
சுவாதி : உதவிகள் கிடைக்கும்.
விசாகம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
பந்தயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் கிடைக்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : புதிய வாய்ப்புகள் அமையும்.
அனுஷம் : நட்பு கிடைக்கும்.
கேட்டை : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். அஞ்ஞான எண்ணங்கள் தோன்றும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
பூராடம் : வெற்றி கிடைக்கும்.
உத்திராடம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
உறவுகளின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். பெரியோர்களின் வழிகாட்டல் புதுவிதமான உத்வேகத்தை அளிக்கும். மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் அளித்து வெற்றி காண்பீர்கள். புதிய இலக்கு மற்றும் யுக்திகளால் மாற்றமான சூழலும், மேன்மையும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : இன்பமான நாள்.
திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
கால்நடைகளால் எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளால் எண்ணிய பலன்கள் கிடைக்கும். முதலாளி மற்றும் தொழிலாளிகளுக்கிடையே சாதகமான சூழல் அமையும். பொறுப்புகள் அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். விவசாயிகளுக்கு தனலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அவிட்டம் : தனலாபம் உண்டாகும்.
சதயம் : கவலைகள் குறையும்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
கௌரவ பதவிகளுக்கான வாய்ப்புகள் அமையும். தகப்பனாரின் சொத்துகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணத்திற்கு வரன் தேடுவோருக்கு சாதகமான வரன்கள் அமையும். அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : பதவி உயர்வு உண்டாகும்.
உத்திரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
ரேவதி : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
