*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஐப்பசி 12_*
*_29.10.2018_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறைந்து ஒற்றுமை மேலோங்கும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அசுவினி : எண்ணங்கள் மேலோங்கும்.
பரணி : அறிவு மேம்படும்.
கிருத்திகை : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். பல நாட்களாக இருந்து வந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள். இளைய சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : மேன்மையான நாள்.
ரோகிணி : வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிடம் : மனக்கவலைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வாக்குவன்மையால் பெருமை உண்டாகும். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : பொருளாதாரம் மேம்படும்.
திருவாதிரை : கீர்த்தி உண்டாகும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். எண்ணிய முயற்சிகள் ஈடேறும். கலைஞர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூரம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : ஆரோக்கியம் மேம்படும்.
சித்திரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உயர்கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : நன்மை உண்டாகும்.
சுவாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
சந்திராஷ்டம தினம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். கையாளும் பொருட்களில் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : கவலைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். வெளித்தொடர்புகளால் நன்மைக் கிடைக்கும். கூட்டாளிகளிடம் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : நன்மைகள் உண்டாகும்.
பூராடம் : விவேகத்துடன் செயல்படவும்.
உத்திராடம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். காரியத் தடைகள் நீங்கி எண்ணிய வெற்றி உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : செல்வாக்கு உயரும்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
நெருக்கமானவர்களிடம் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். வாரிசுகள் மூலம் சுப விரயம் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். செய்யும் செயல்களால் பாராட்டப்படுவீர்கள். திட்டமிட்ட பயணங்களில் சில மாற்றங்கள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.
சதயம் : சுப விரயம் உண்டாகும்.
பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். வேள்விகளில் கலந்துகொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். புத்திக்கூர்மை வெளிப்படும். பூர்வீக சொத்துகளால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : இலாபம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
