????? காலை வணக்கங்கள்???தமிழால் இறைவனை தினம் பாடு ??
?இன்றைய ராசிபலன்கள்?
~~~முத்தமிழ் டிவி~~~
? வியாழன் ? 18.10.2018.?விளம்பி – ஐப்பசி.1. ?சரஸ்வதி பூஜை (ஆயுத பூஜை)?
⚡மேஷம்
தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொருளாதார வகையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். நீங்கள் செய்யும் செயல்களால் செல்வாக்கும், நற்பெயரும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : இலாபம் கிடைக்கும்.
பரணி : சுபிட்சம் உண்டாகும்.
கிருத்திகை : ஒற்றுமை மேம்படும்.
⚡ரிஷபம்
முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பொருளாதார மேன்மையும், தொழிலில் எதிர்பார்த்த சாதகமான மாற்றங்களும் உண்டாகும். கௌரவ பதவிகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தைரியத்துடன் புதிய எண்ணங்களை செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரோகிணி : மாற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : மரியாதை உயரும்.
⚡மிதுனம்
தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். மனதில் தோன்றும் இனம்புரியாத எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேற காலதாமதமாகும். புதிய நண்பர்களால் சில மனக்கசப்புகள் நேரிடலாம். வாக்குறுதிகளை கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேற காலதாமதமாகும்.
⚡கடகம்
உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு கூடும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நினைத்த காரியத்தை திட்டமிட்டப்படி செய்து முடிப்பீர்கள். சுபச் செய்திகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : செல்வாக்கு உயரும்.
பூசம் : காரியசித்தி உண்டாகும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
⚡சிம்மம்
தொழில் சம்பந்தமான முயற்சிகளில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கி சாதகமான சூழல் அமையும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தோன்றி மறையும். தாய்மாமன் உறவுகளால் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையும். தடைபட்ட செயல்களை திட்டமிட்டப்படி செய்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.
⚡கன்னி
உங்களின் புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நினைவாற்றல் மேம்படும். தந்தைவழி உறவுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். நினைத்த காரியத்தை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். தொழில் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
அஸ்தம் : கவலைகள் நீங்கும்.
சித்திரை : வெற்றி உண்டாகும்.
⚡துலாம்
ஆன்மீக பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டுதலும், ஆதரவான சூழலும் அமையும். தந்தை பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். தொழிலில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். தொழில் அபிவிருத்திக்கான தனவரவுகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
சுவாதி : ஆதரவான நாள்.
விசாகம் : தனவரவுகள் கிடைக்கும்.
⚡விருச்சிகம்
தொழில் சார்ந்த முயற்சிகளும், திட்டங்களும் சாதகமான பலனை அளிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
அனுஷம் : தன்னம்பிக்கை மேம்படும்.
கேட்டை : வெற்றி உண்டாகும்.
⚡தனுசு
புதிய வாகனங்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும். ஆரோக்கியம் சம்பந்தமான சில பிரச்சனைகள் தோன்றி மறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மேன்மையான சூழலை உண்டாக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மூலம் : சிந்தனைகள் மேம்படும்.
பூராடம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.
⚡மகரம்
தொழிலில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் சம்பந்தமான பணிகள் இலாபம் தரும். சிலருக்கு ஊதிய உயர்வும், பாராட்டுகளும் கிடைக்கும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : பாராட்டப்படுவீர்கள்.
அவிட்டம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
⚡கும்பம்
வெளியூர் சம்பந்தமான தொழில் வாய்ப்புகள் சாதகமான முடிவினை தரும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி சாதகமான சூழல் அமையும். உடலில் இருந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி நன்மை உண்டாகும். மனக்கவலைகள் அகலும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : இன்பமான நாள்.
சதயம் : கவலைகள் குறையும்.
பூரட்டாதி : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
⚡மீனம்
சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு புதிய எண்ணங்கள் தோன்றும். புத்திரர்களால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். வேலைவாய்ப்புகளில் இருந்து வந்த இழுபறியான நிலை நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : புதிய எண்ணங்கள் தோன்றும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி : இலாபகரமான நாள்.
????????????????????????
