*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஐப்பசி 02_*
*_19.10.2018_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகளும், அதைச்சார்ந்த அலைச்சல்களும் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். உடன் பணிபுரிபவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : நிதானத்துடன் செயல்படவும்.
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
சுபச் செய்திகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் சிறு மாற்றங்களால் எண்ணிய இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் செல்வாக்கு உயரும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
ரோகிணி : செல்வாக்கு உயரும்.
மிருகசீரிடம் : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
எதிர்பார்த்த செயல்கள் கைகூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுசரித்துச் செல்லவும். உத்தியோகம் சம்பந்தமான விவகாரங்களில் நிதானம் தேவை. புதிய முடிவுகளை எடுக்கும்போது தகுந்த ஆலோசனைப் பெற்று முடிவெடுக்கவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிருகசீரிடம் : அமைதி வேண்டும்.
திருவாதிரை : நிதானம் தேவை.
புனர்பூசம் : இடமாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
தொழிலிற்கு புத்திரர்களின் ஆதரவு கிடைக்கும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : தெளிவு பிறக்கும்.
ஆயில்யம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமான பலனை அளிக்கும். நுட்பமான விஷயங்கள் பற்றிய அனுபவமும், அறிவும் உண்டாகும். செய்யும் பணிகளில் உள்ள எதிர்ப்புகளை கடந்து வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மகம் : விவேகத்துடன் செயல்படவும்.
பூரம் : அறிவு மேம்படும்.
உத்திரம் : வெற்றி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். விளையாட்டு வீரர்களுக்கு திறமைக்கேற்ற பாராட்டுகளும், பரிசுகளும் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கொடுக்கல் – வாங்கலில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கோபமான பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : பாராட்டுகள் கிடைக்கும்.
சித்திரை : கனிவுடன் பழகவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகளும், உதவிகளும் கிடைக்கும். பயணங்களின் மூலம் இலாபம் உண்டாகும். கூட்டாளிகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஒற்றுமை மேலோங்கும்.
சுவாதி : இலாபகரமான நாள்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
செய்யும் செயல்களில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். பூமி விருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாகனங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். பயணங்களால் சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : பதற்றமின்றி செயல்படவும்.
அனுஷம் : முயற்சிகள் மேம்படும்.
கேட்டை : சாதகமான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
பிள்ளைகளின் செயல்பாட்டில் கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவும். வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் பழகவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : செயல்பாட்டில் கவனம் தேவை.
பூராடம் : அமைதி வேண்டும்.
உத்திராடம் : கனிவுடன் பழகவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
சொத்து சம்பந்தமான சிந்தனைகள் மேலோங்கும். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம் : ஜெயம் உண்டாகும்.
அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். தொழில் தொடர்பான முடிவுகளை பெரியவர்களிடம் கலந்தாலோசித்து எடுக்கவும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சாதகமான வாய்ப்புகளும், ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
அவிட்டம் : பயணங்களால் மாற்றம் ஏற்படும்.
சதயம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூரட்டாதி : ஆதரவு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பதற்கான ஆதரவு கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நீண்ட கால நண்பர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் அமையும். குடும்ப நபர்களின் ஆதரவால் புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். மகான்களின் தரிசனம் புதுவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
ரேவதி : தரிசனம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
