சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் பிறந்தநாளை முன்னிட்டு பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சார்பில் நிலவரப்பட்டியில் உள்ள தொன் போஸ்கோ கருணை இல்லத்தில் பயிலும் 47 மாணவ மாணவிகளுக்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் கலந்துகொண்டு கருணை இல்லத்திற்கு தேவையான பொருட்களை வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் பனமரத்துப்பட்டி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் உமாசங்கர், நிலவரப்படி ஊராட்சி மன்ற தலைவர் திருமுருகன், மாவட்ட பிரதிநிதி சேகர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அன்பு, ஒன்றிய கவுன்சிலர் மகேந்திர பிரபு, பனமரத்துப்பட்டி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சத்யராஜ், கரிகாலன் மற்றும் விக்கி, பிரபு சக்கரவர்த்தி, தினேஷ் குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.