எக் பிரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:

  •  2 பச்சைமிளகாய்
  •  1 வெங்காயம்
  •  4 முட்டை
  •  காய்ந்த மிளகாய்
  •  சீரகம்
  •  கடுகு
  •  மஞ்சள்தூள்
  •  கருவேப்பிலை
  •  எண்ணெய் தேவைக்கேற்ப
  •  உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

             எக் பிரைட் ரைஸ் ரெசிபி – முதலில், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.

             பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

            பிறகு உப்பு, சீரகம்,. மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

            மசாலா பதத்திற்கு வந்ததும் அதில், வடித்து வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். இறுதியாக, மிளகுத்தூளை தூவி கிளறி இறக்கவும்.

            ருசியான எக் பிரைட் ரைஸ் ரெடி..!