*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஐப்பசி 14_*

*_31.10.2018_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். பொதுச் சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். சுயதொழில் நிமிர்த்தமான புதிய முடிவுகள் சாதகமாகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் சாதகமான பலனை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : புதிய மாற்றம் உண்டாகும்.
பரணி : வெற்றி கிடைக்கும்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். இளைய சகோதரர்களால் சாதகமற்ற சூழ்நிலை உண்டாகும். பணியில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரோகிணி : திறமைகள் வெளிப்படும்.
மிருகசீரிடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

எதிர்பாராத தனவரவால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணப்பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். தலைமை அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். மாற்றமான சூழல் அமையும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : சுபச் செய்திகள் உண்டாகும்.
புனர்பூசம் : ஆதரவான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

வாகனப் பயணங்களில் எச்சரிக்கை வேண்டும். சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். வணிகம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு மந்தமான சூழ்நிலை உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். கூட்டாளிகளால் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : பயணங்களில் எச்சரிக்கை தேவை.
பூசம் : அமைதியை கடைபிடிக்கவும்.
ஆயில்யம் : பணியில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

வாரிசுகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். கல்வி பயிலும் மாணவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். அந்நியர்களின் உதவியால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உறவுகளின் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : அமைதியை கடைபிடிக்கவும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

பொருட்சேர்க்கை உண்டாகும். கடிதத்தின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். நுணுக்கமான புதிய தொழில் நுட்பங்களை பயில்வீர்கள். தொழில் வகையில் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். நீர் நிலைய பணியில் உள்ளவர்களுக்கு இலாபகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

உத்திரம் : மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : புதிய நுட்பங்களை பயில்வீர்கள்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வாகனங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். புதிய வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். வாரிசுகளின் மூலம் தொழில் வகை ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான சூழல் அமையும்.
சுவாதி : ஆசைகள் நிறைவேறும்.
விசாகம் : தனவரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பயணங்களின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். பொது தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு மகிழ்ச்சியான நாள். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : காரியசித்தி உண்டாகும்.
அனுஷம் : இலாபம் அதிகரிக்கும்.
கேட்டை : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

தொழிலில் கூட்டாளிகளிடம் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குறுகிய தூர பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். செய்தொழிலில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய பொருட்களை வாங்குவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : விவேகம் வேண்டும்.
பூராடம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

உங்களின் செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் அமையும். ஆன்மீக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். எண்ணிய காரியங்களில் காலதாமதம் உண்டாகும். கூட்டாளிகளால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
திருவோணம் : வாய்ப்புகள் அமையும்.
அவிட்டம் : காலதாமதம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். வெளிப்படையான பேச்சுகள் மூலம் தெளிவு பிறக்கும். நுட்பமான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் மற்றும் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
சதயம் : புரிதல் உண்டாகும்.
பூரட்டாதி : அறிவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

புதிய தொழில் முயற்சிகளால் மேன்மை உண்டாகும். சபைகளில் ஆதரவு அதிகரிக்கும். உடைமைகளில் சற்று கவனம் வேண்டும். வேள்விகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். புத்திரர்களின் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகள் மூலம் மாற்றம் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் ஆரஞ்சு

பூரட்டாதி : மேன்மையான நாள்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி : மாற்றம் பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•