*_?முத்தமிழ்?_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆடி 10_*

*_26.07.2018_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

தொழிலில் உங்களின் மதிப்பு உயரும். மனக்கவலைகள் தீரும். பூமிவிருத்தி உண்டாகும். வர்த்தக பணிகளில் உள்ளவர்களுக்கு இலாபம் கிடைக்கும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதங்களில் மாற்றம் உண்டாகும். புதிய நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அசுவினி : மதிப்பு உயரும்.
பரணி : பூமிவிருத்தி உண்டாகும்.
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். நீர் நிலைய தொழில்களில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : கவனத்துடன் இருக்கவும்.
ரோகிணி : மனச்சோர்வு உண்டாகும்.
மிருகசீரிடம் : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

சுயதொழிலில் எதிர்பாராத இலாபம் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுக்கூட்ட பேச்சுகளால் மக்களின் ஆதரவு கிடைக்கும். புண்ணிய வேள்விகளால் நற்பெயர் உண்டாகும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : நற்பெயர் உண்டாகும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

விருந்தினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நீர்வழி தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் சாதகமான நிலை அமையும். நண்பர்களின் மூலம் தொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூசம் : இலாபம் கிடைக்கும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

புதிய செயல்திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். பணியில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். வாரிசுகளால் பெருமை உண்டாகும். வீண் கவலைகளால் மனம் வருந்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : புதிய முயற்சிகள் ஈடேறும்.
பூரம் : பெருமை உண்டாகும்.
உத்திரம் : அமைதியை கடைபிடிக்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். ஞானம் சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வாதங்களில் கவனத்துடன் இருக்கவும். உயர் பதவி கிடைப்பதற்கான சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.
அஸ்தம் : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.
சித்திரை : பேச்சில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

பணியில் மேன்மையான சூழல் அமையும். எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : சிந்தனையில் மாற்றம் உண்டாகும்.
சுவாதி : பணியில் மேன்மையான சூழல் அமையும்.
விசாகம் : எதிர்பாராத தனவரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

நண்பர்களின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். வாகனப் பயணங்களால் தனலாபம் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்

விசாகம் : பொருட்சேர்கை உண்டாகும்.
அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.
கேட்டை : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் தோன்றும் பல்வேறு குழப்பங்களினால் சோர்வு உண்டாகும். உடன் பிறந்தவர்களினால் சுப விரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

மூலம் : வெற்றி கிடைக்கும்.
பூராடம் : அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் : சோர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். புதிய எண்ணங்கள் தோன்றும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பண தேவையை சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
திருவோணம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
அவிட்டம் : நிதானம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். எதிர்ப்புகளை வெல்வீர்கள். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகளால் இலாபம் ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
சதயம் : சாதகமான சூழல் அமையும்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தமான முதலீடுகளில் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கவும். வரவுக்கு ஏற்ற செலவு உண்டாகும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உத்திரட்டாதி : அமைதியை கடைபிடிக்கவும்.
ரேவதி : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•