*_???.முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆடி 09_*

*_25.07.2018_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை உயரும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
பரணி : பொறுப்புகள் உயரும்.
கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள். பூர்வீகம் சம்பந்தமான சுப விரயங்களை செய்வீர்கள். போட்டித்தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சக ஊழியர்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.
ரோகிணி : வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிடம் : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுபச் செய்திகள் வந்தடையும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : இன்பமான நாள்.
திருவாதிரை : அன்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படவும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களின் உதவியால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : பேச்சுகளை குறைக்கவும்.
பூசம் : நிதானம் தேவை.
ஆயில்யம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : தைரியம் பிறக்கும்.
பூரம் : பாராட்டப்படுவீர்கள்.
உத்திரம் : தனவரவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு சாதகமான சூழல் அமையும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். பிள்ளைகளால் சுப விரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்

உத்திரம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அஸ்தம் : மாற்றமான நாள்.
சித்திரை : பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். சுயதொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். தாயாரின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : மேன்மையான நாள்.
சுவாதி : சிந்தித்து செயல்படவும்.
விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து உறவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

விசாகம் : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.
அனுஷம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
கேட்டை : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். அந்நியர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்துகளால் சுப விரயம் ஏற்படும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவோணம் : சுப விரயம் உண்டாகும்.
அவிட்டம் : கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். வான்வழி பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்கள் புகழப்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : அமைதியுடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

அரசாங்கத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவார்கள். இளைய சகோதரர்களால் சுப விரயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : சேமிப்பு அதிகரிக்கும்.
ரேவதி : காரியசித்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•