*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_மார்கழி 09_*

*_24.12.2018_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும். புதிய தொழிலாளர்களை நியமிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : அமைதி வேண்டும்.
பரணி : கலையறிவு அதிகரிக்கும்
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : புத்துணர்ச்சி கிடைக்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் அமையும்.
மிருகசீரிடம் : கவலைகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

அரசு அதிகாரிகளுக்கு இடையேயான நட்பில் பரஸ்பரம் உண்டாகும். பேச்சுத்திறமையால் புகழப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை. எதிர்பார்த்த வங்கி கடனுதவிகள் கிடைக்கும். மனைவியால் சுப விரயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : பரஸ்பரம் உண்டாகும்.
திருவாதிரை : புகழப்படுவீர்கள்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பிள்ளைகளிடமிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். வெளியூர் வேலைவாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூசம் : வாய்ப்புகள் அமையும்.
ஆயில்யம் : அன்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பெரியோர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். ஞாபக மறதிகள் உண்டாகும். இறைவழிபாட்டால் மனம் மகிழ்ச்சி அடையும். வாக்குவன்மையால் இலாபம் அடைவீர்கள். அந்நியர்களால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணத்தை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
பூரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திரம் : பயணங்களால் இலாபம் கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

கால்நடை வியாபாரிகளுக்கு தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். தாய் வழி உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். பொருளாதார மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
அஸ்தம் : மகிழ்ச்சி பிறக்கும்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தொழிலில் வேலையாட்களால் கவலைகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனத்துடன் செயல்படவும். செயல்வேகம் அதிகரிக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : செயல்வேகம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தனவரவுகளால் திருப்திகரமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் உதவிகளால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் :6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் :தனவரவு கிடைக்கும்
அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
கேட்டை : புதிய எண்ணங்கள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. பலவிதமான சிந்தனைகளால் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை நேரிடலாம். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மூலம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூராடம் :அனுசரித்துச் செல்லவும்.
உத்திராடம் : அமைதி வேண்டும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தொழிலில் நீங்கள் கற்ற சில யுக்திகளால் இலாபம் அதிகரிக்கும். வெளியூர் தொழில் சார்ந்த முயற்சிகளால் அனுகூலம் உண்டாகும். பிறருக்கு ஜாமீன் கையெழுத்துப்போடுவதில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணிகளில் உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் :2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : இலாபம் உண்டாகும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : முன்னுரிமை கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பயணங்களால் இலாபம் கிடைக்கும். உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் :அன்பு அதிகரிக்கும்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி : கவலைகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பழைய தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி :சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி :முன்னேற்றமான நாள்
ரேவதி : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•