*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_புரடாசி 03_*

*_19.09.2018_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

புதிய தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். தலைமை பதவியில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். வாகனப் பயிற்சியை மேற்கொள்ளும்போது நிதானம் வேண்டும். உடைமைகளில் கவனம் வேண்டும். புத்திக்கூர்மையில் மந்தத்தன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அசுவினி : எண்ணங்கள் மேலோங்கும்.
பரணி : கவனத்துடன் செயல்படவும்.
கிருத்திகை : மந்தத்தன்மை ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

மனதில் இருந்து வந்த கவலைகள் அகலும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாதத்திறமையால் அனைவரையும் கவர்வீர்கள். உயர் அதிகாரிகள் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : கவலைகள் அகலும்.
ரோகிணி : அனைவரையும் கவர்வீர்கள்.
மிருகசீரிடம் : உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழிலில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு புதிய மாற்றங்களை செய்வீர்கள். கோபத்தை விடுத்து அனைவரிடமும் அமைதியுடன் செயல்படவும். புதிய சிந்தனைகள் தோன்றும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
திருவாதிரை : புதிய மாற்றங்களை செய்வீர்கள்.
புனர்பூசம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

மன மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கால்நடைகளால் இலாபம் அதிகரிக்கும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான விவகாரங்களில் நிதானம் வேண்டும். பணியில் எதிர்பார்த்த சில மாற்றங்கள் உண்டாகலாம். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
பூசம் : இலாபம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

மனைவியின் ஆதரவால் சில செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத அலைச்சலும், செலவும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூரம் : அலைச்சல் ஏற்படும்.
உத்திரம் : பணவரவு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவார்கள். உயர்கல்வி சம்பந்தமான வீண் கவலைகள் உண்டாகும். பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : கவலைகள் உண்டாகும்.
சித்திரை : எண்ணங்கள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க தடை, தாமதம் நேரிடலாம். போட்டிகளில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாலின மக்களால் ஆதரவான சூழல் உண்டாகும். பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : செயல்களில் காலதாமதம் நேரிடலாம்.
விசாகம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

பணியில் இருந்து வந்த எதிர்ப்புகள் மறையும். நண்பர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் அகலும். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்து வந்த காலதாமதம் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

விசாகம் : எதிர்ப்புகள் மறையும்.
அனுஷம் : காலதாமதம் நீங்கும்.
கேட்டை : மனக்கசப்புகள் அகலும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். குழந்தைகள் பற்றிய வீண் கவலைகள் அகலும். கூட்டாளிகளின் உதவியால் தொழில் சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
பூராடம் : மகிழ்ச்சியான சூழல் அமையும்.
உத்திராடம் : முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ள உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
அவிட்டம் : முன்னேற்றமான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

வர்த்தகம் சம்பந்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. செய்யும் செயலில் கவனம் வேண்டும். திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் ஏற்படும். வாகனத்திற்கான பராமரிப்பு செலவுகள் நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
சதயம் : வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

வியாபாரம் சம்பந்தமான பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்கள் பணி நிமிர்த்தமாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
ரேவதி : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•