*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மாசி 05_*

*_17.02.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். மேல் அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். தாயிடம் அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அசுவினி : சுபமான நாள்.
பரணி :நிதானம் வேண்டும்.
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழிலில் மேன்மையான சூழல் அமையும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.
ரோகிணி : வெற்றி உண்டாகும்.
மிருகசீரிடம் : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் உங்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மிருகசீரிடம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : புத்திக்கூர்மை வெளிப்படும்.
புனர்பூசம் :இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எதிர்பார்த்த உதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்கால சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். விவாதங்களினால் கீர்த்தி அடைவீர்கள். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அனுகூலமான சூழல் அமையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். கோபத்தை விடுத்து சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் பழகவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் :அனுகூலமான நாள்.
பூரம் : நட்பு வட்டம் விரிவடையும்.
உத்திரம் : சிந்தித்துச் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

நிர்வாகத்தில் உள்ள குறைகளை களைவீர்கள். புதுவித உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : எதிர்ப்புகள் நீங்கும்.
அஸ்தம் : மாற்றமான நாள்.
சித்திரை : சேமிப்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். செய்தொழிலில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
சுவாதி : மதிப்பு கிடைக்கும்.
விசாகம் :திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலனில் கவனம் வேண்டும். புதுவிதமான அணுகுமுறையால் மாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு மதிப்பு உயரும். தம்பதிகளுக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை :தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : மாற்றமான நாள்.
கேட்டை : மதிப்பு உயரும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

செய்யும் பணியில் பிறரின் இடர்பாடுகளால் காலதாமதம் ஏற்படும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். நெருங்கிய நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : காலதாமதம் உண்டாகும்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : மனக்கசப்புகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். தொழில் முன்னேற்றத்திற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். இளைய சகோதரர்களினால் சுபவிரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவோணம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அவிட்டம் : சுபவிரயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். உடன்பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். அந்நியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : பாராட்டுகள் கிடைக்கும்.
சதயம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூரட்டாதி :பேச்சில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

திருமண வரன்கள் சாதகமாக அமையும். கலை சார்ந்த அறிவுகளால் பாராட்டப்படுவீர்கள். மனைகளால் இலாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கமான விஷயங்களை கற்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : நினைத்த காரியம் ஈடேறும்.
உத்திரட்டாதி : அறிவு மேம்படும்.
ரேவதி : கலகலப்பான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•