*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_தை 02_*

*_16.01.2019_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

கணவன் – மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். வியாபாரத்திலிருந்த பிரச்சனைகள் குறையும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கைக்கு வரும். பணியில் ஒருவிதமான குழப்பமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : தனவரவுகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். எண்ணிய செயலை செய்து முடிப்பதில் சில காலதாமதம் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். பணியில் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.
ரோகிணி : சிந்தித்துச் செயல்படவும்.
மிருகசீரிடம் : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தொழில் சம்பந்தமான முடிவுகளில் உறவுகளின் ஆதரவுகள் கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் இனிதே நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணியில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : காரியசித்தி உண்டாகும்.
புனர்பூசம் : சுபமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

கலை சம்பந்தமான அறிவால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுகளால் பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த பலன் காலதாமதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

செய்கின்ற பணியில் திருப்தியான சூழ்நிலை அமையும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : திருப்தியான நாள்.
பூரம் : முடிவுகள் கிடைக்கும்.
உத்திரம் : எதிர்ப்புகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

எந்தவொரு செயலிலும் சற்று நிதானத்துடன் செயல்படவும். குடும்ப பெரியோர்களிடம் கனிவுடன் பழகவும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் சற்று சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது நன்மையை பயக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சித்திரை :சிந்தித்துச் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பூமி விருத்திக்கான பணிகளில் காலதாமதம் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத தன வரவுகளால் மேன்மையான சூழ்நிலை அமையும். நண்பர்களிடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : இன்பமான நாள்.
சுவாதி : மேன்மையான உண்டாகும்.
விசாகம் : மனக்கசப்புகள் அகலும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணியில் சக ஊழியர்களால் மனநிம்மதி ஏற்படும். கௌரவ பதவிகளால் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : மதிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

புதிய நபர்களால் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் சில அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூராடம் : காலதாமதம் உண்டாகும்.
உத்திராடம் : பேச்சில் நிதானம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தம்பதிகளுக்கிடையே புரிதல் உணர்வு அதிகரிக்கும். கூட்டாளிகளால் பொருள் இலாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைக்கூடும். சம வயதினரால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
திருவோணம் : இலாபகரமான நாள்.
அவிட்டம் : நன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

செய்கின்ற பணியில் இடமாற்றம் ஏற்படலாம். பங்காளிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எண்ணிய செயலை முடிப்பதில் துரிதம் உண்டாகும். எதிர்பாலின மக்களால் எற்பட்ட இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சொத்துச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : இடமாற்றம் ஏற்படலாம்.
சதயம் : இன்னல்கள் குறையும்.
பூரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பொதுச் செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். மேலதிகாரிகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

பூரட்டாதி : மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்திரட்டாதி : சேமிப்பு உயரும்.
ரேவதி : செல்வாக்கு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•