*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆவணி 30_*

*_15.09.2018_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவு கிடைக்க காலதாமதமாகும். சந்திராஷ்டம தினம் என்பதால் நண்பர்களிடம் வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது. செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். சுபச் செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

அசுவினி : வாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரணி : கவனமாக இருக்கவும்.
கிருத்திகை : சுப விரயங்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவினால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பிரவுன்

கிருத்திகை : இலாபம் அடைவீர்கள்.
ரோகிணி : மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

சம வயதினரிடம் அனுசரித்துச் செல்லவும். மனைவியிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.
புனர்பூசம் : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

புதிய சிந்தனைகள் மேலோங்கும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் காணாத உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

தலைமை பதவியில் உள்ள அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். செய்யும் பணிகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். வாரிசுகளுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : விவேகத்துடன் செயல்படவும்.
பூரம் : பணிகளில் கவனம் தேவை.
உத்திரம் : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனை விவகாரங்களில் இருந்த சிக்கல்கள் குறையும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அஸ்தம் : காரியசித்தி உண்டாகும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் இலாபம் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும். கால்நடைகளால் இலாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : பேச்சுத்திறனால் இலாபம் உண்டாகும்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.
விசாகம் : தனலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். முயற்சியால் சேமிப்புகள் உயரும். கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : புதிய நட்பு கிடைக்கும்.
அனுஷம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
கேட்டை : வாய்ப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். அறக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். வாதங்களில் எண்ணிய எண்ணம் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மூலம் : சுபச் செய்திகள் வரும்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

தூர தேசப் பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான நிலை உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். உறவுகளிடம் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : சிக்கல்கள் குறையும்.
திருவோணம் : ஆதாயம் உண்டாகும்.
அவிட்டம் : நிதானம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

சேமிப்பு அதிகரிக்கும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.
சதயம் : அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

தொழில் சம்பந்தமான முக்கிய நபரை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
ரேவதி : செல்வாக்கு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•