*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆனி 31_*
*_15.07.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வரும். பலனை எதிர்பாராமல் செய்த செயல்களால் இலாபம் உண்டாகும். சகோதரர்களிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். பணியில் மேன்மை அடைவதற்கான செயல்களை செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : மனக்கசப்புகள் குறையும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அறச்செயலுக்காக நன்கொடைகள் கொடுத்து மகிழ்வீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் செயல்படவும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : கவனமாக பேசவும்.
ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.
மிருகசீரிடம் : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது சுபிட்சத்தை உண்டாக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். கணவன், மனைவிக்கிடையே உறவு நிலை மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிடம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : சாதகமான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
பிறருக்கு உதவும்போது கவனமாக இருக்க வேண்டும். பணப்புழக்கத்தில் எச்சரிக்கை தேவை. தைரியத்துடன் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளின் வேகம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : கீர்த்தி உண்டாகும்.
ஆயில்யம் : நற்பலன் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். தூர தேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வாகனங்களால் இலாபம் உண்டாகும். கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : கவலைகள் குறையும்.
உத்திரம் : சுப விரயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
செய்யும் தொழிலில் புதுவித மாற்றங்களை செய்து இலாபம் அடைவீர்கள். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உறவினர்களுக்கிடையே உறவு நிலை மேம்படும். வாகனப் பயணங்களில் மிகுந்த கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.
அஸ்தம் : மனம் மகிழ்வீர்கள்.
சித்திரை : உறவு நிலை மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாடுகளுக்கான பயணங்களால் நன்மை கிடைக்கும். உயர்கல்வியில் புதுவித ஆராய்ச்சிகளால் புகழப்படுவீர்கள். நண்பர்களின் மூலம் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகள் எதிர்பார்த்த பலனைத் தரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : பாராட்டப்படுவீர்கள்.
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்க காலதாமதமாகும். பொன் போன்ற விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
அனுஷம் : கடனுதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.
கேட்டை : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமை புலப்படும். உத்தியோகஸ்தரர்கள் பணியில் மேன்மை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் தனலாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூராடம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
போட்டிகளில் பங்குப்பெற்று இலாபம் அடைவீர்கள். கடன்காரர்களால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும். திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அறிமுகமில்லாத நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : இலாபம் அடைவீர்கள்.
திருவோணம் : மன வருத்தம் குறையும்.
அவிட்டம் : மாற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
மனதில் புதவிதமான எண்ணங்கள் பிறக்கும். வாரிசுகளால் பெருமையடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் அமையும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : புதிய எண்ணங்கள் பிறக்கும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
தாயின் ஆதரவினால் பொருட்சேர்க்கை உண்டாகும். அரசு பணிக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மூத்த சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களின் மூலம் அனுகூலமான சூழல் அமையும். நண்பர்களுக்கிடையே வீண் விவாதத்தை தவிர்க்கவும். புதிய முயற்சிகளால் சாதகமான முடிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : விவாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
