*_??முத்தமிழ் டிவி??_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆவணி 24_*

*_09.09.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

சுபச் செய்திகள் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். கௌரவ பதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : மதிப்பு உயரும்.
பரணி : சேமிப்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

உடல் சோர்வினால் செய்யும் பணிகளில் மந்தத்தன்மை உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும். மனதில் ஒருவிதமான எண்ணங்கள் தோன்றும். இறைவழிபாட்டில் மனதை செலுத்துவது நல்லது. புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

கிருத்திகை : மந்தத்தன்மை உண்டாகும்.
ரோகிணி : சுப முடிவுகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

தொழில் முனைவோர்க்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அரசு சம்பந்தமான பணிகளில் இருந்து வந்த காலதாமதம் நீங்கும். வாழ்க்கையைப் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
திருவாதிரை : காலதாமதம் நீங்கும்.
புனர்பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூசம் : புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : காரியசித்தி உண்டாகும்.
பூரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரம் : கவனத்துடன் இருக்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உறவினர்களின் உடல்நலத்தில் மேன்மை உண்டாகும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும்.
அஸ்தம் : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
சித்திரை : மதிப்பு கூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியங்கள் இனிதே நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வாதங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : வாதங்களால் இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

உறவினர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. எதிர்பாலின மக்களால் சில இன்னல்கள் தோன்றி மறையும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்ப விவகாரங்களில் பிறரின் தலையீட்டை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : அமைதியுடன் செயல்படவும்.
அனுஷம் : எதிர்ப்புகள் குறையும்.
கேட்டை : தலையீட்டை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

விடாப்பிடியாக இருந்து சில செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளும், ஆசீர்வாதங்களும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : எண்ணங்கள் நிறைவேறும்.
பூராடம் : இலாபம் அதிகரிக்கும்.
உத்திராடம் : ஆசிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

வீண் செலவுகளை குறைக்க முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களால் நன்மை உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.
திருவோணம் : இன்னல்கள் குறையும்.
அவிட்டம் : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

தாய் வழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். சக ஊழியர்களால் அனுகூலமான சூழல் அமையும். கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.
சதயம் : அன்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

தைரியத்துடன் திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் மேன்மையான சூழல் அமையும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உயர் அதிகாரிகளிடம் நிதானமாக உரையாடவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
உத்திரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ரேவதி : பேச்சில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•