*_??முத்தமிழ்??_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆவணி 22_*

*_07.09.2018_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். பிறரின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்த்தல் நல்லது. தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். இணையதளம் சம்பந்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : அமைதியை கடைபிடிக்கவும்.
பரணி : செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பங்குதாரர்களிடம் அனுகூலமான சூழல் உண்டாகும். அரசு அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

பணியில் இருந்து வந்த தடைகள் அகலும். பொருட்சேர்க்கை உண்டாகும். தந்தை வழி உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை செயல்படுத்துவதால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : தடைகள் அகலும்.
திருவாதிரை : சுபச் செய்திகள் கிடைக்கும்.
புனர்பூசம் : மதிப்பு கூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

பணி சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் பதட்டமின்றி நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.
ஆயில்யம் : விமர்சனங்கள் நேரிடலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

சாதுர்யமான பேச்சுகளால் சில பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நண்பர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தொழில் சம்பந்தமான புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : காரியசித்தி உண்டாகும்.
பூரம் : புதிய நட்பு கிடைக்கும்.
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

செய்தொழிலில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறைந்து சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழிலில் வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பணியில் முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
சித்திரை : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தூரத்து உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். செய்யும் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.
விசாகம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளால் பணப்புழக்கம் மேம்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களால் வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : தனவரவு மேம்படும்.
கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எண்ணிய பணிகளை காலதாமதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களின் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : இன்பமான நாள்.
பூராடம் : புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
உத்திராடம் : பணிகளில் காலதாமதம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளால் மேன்மையான நிலை உண்டாகும். பணி சம்பந்தமான முடிவுகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். எடுத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அலங்காரப் பொருட்களின் மீது நாட்டம் ஏற்படும். சகோதர ஒற்றுமை மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : தெளிவு பிறக்கும்.
சதயம் : வாய்ப்புகள் அமையும்.
பூரட்டாதி : ஒற்றுமை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

புதிய நபர்களின் ஆதரவால் இலாபம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுநலக் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலையாட்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•