*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_புரடாசி 17_*
*_03.10.2018_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
இளைய உடன்பிறப்புகளிடம் அன்பாக நடந்து கொள்ளவும். எண்ணிய முயற்சிகளில் சில காரியத் தடங்கல்கள் உண்டாகலாம். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத கடனுதவிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : அமைதியை கடைபிடிக்கவும்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : காரியத் தடங்கல்கள் ஏற்படலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கூட்டாளிகளின் உதவியால் புதிய தொழிலை மேற்கொள்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள். செயல்பாடுகளில் ஏற்பட்ட மந்தத்தன்மையால் காரியத் தடங்கல்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
கிருத்திகை : செயல்களில் காலதாமதம் உண்டாகும்.
ரோகிணி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிருகசீரிடம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதுவிதமான திட்டங்களை தீட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிடம் : கலகலப்பான நாள்.
திருவாதிரை : மதிப்பு கூடும்.
புனர்பூசம் : தனலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
பயணங்களால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வாரிசுகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் அளவாக பழகவும். செய்யும் பணிகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
புனர்பூசம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : பணியில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
தனவரவுகளால் சேமிப்பு உயரும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகம் : சேமிப்பு உயரும்.
பூரம் : வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
அரசு அதிகாரிகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய சொத்து சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.
அஸ்தம் : அன்பு அதிகரிக்கும்.
சித்திரை : ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
கௌரவ பதவிகளுக்கான வாய்ப்புகள் அமையும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : புதிய நட்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : ஆசிகள் கிடைக்கும்.
அனுஷம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். மனைவி வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். வெளியூர் பயணங்களில் கூடுதல் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூராடம் : நம்பிக்கை மேலோங்கும்.
உத்திராடம் : பயணங்களில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பணிகளில் உள்ளோர்க்கு பொறுப்புகள் அதிகரிக்கும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். துரிதமான செயல்பாடுகளால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திராடம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
திருவோணம் : இலாபம் உண்டாகும்.
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
பொருட்சேர்க்கை உண்டாகும். மறுமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சாதகமான வரன்கள் கிடைக்கும். அரசாங்க அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் உண்டாகும். பூமி விருத்திக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுத் தொண்டில் உள்ளவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.
சதயம் : முயற்சிகள் ஈடேறும்.
பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
புதிய முயற்சிகளால் எண்ணிய பலன் கிடைக்கும். முதலாளி மற்றும் தொழிலாளிகளுக்கு இடையே சாதகமான சூழல் அமையும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : எண்ணம் ஈடேறும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
