*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_தை 19_*
*_02.02.2019_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
எதிர்பார்த்த தனவரவுகள் மன நிம்மதியை அளிக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். உங்களின் திறமையால் பொருள் இலாபம் அடைவீர்கள். அந்நியர்களின் ஆதரவால் தொழில் வகை இலாபம் அதிகரிக்கும். அயல்நாட்டு பயணங்களில் இருந்த தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அசுவினி : நிறைவான நாள்.
பரணி : எண்ணியவை ஈடேறும்.
கிருத்திகை : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
விடாப்பிடியாக இருந்து எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கலைஞர்களின் முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்க காலதாமதமாகும். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சற்று கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : காரியசித்தி உண்டாகும்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். தூர தேசப் பயணங்களில் சில இடையூறுகள் உண்டாகும். எதிர்பாராத சுபச் செய்திகளால் சுப விரயம் உண்டாகும். மனதில் தோன்றும் பய உணர்வால் பதற்றம் ஏற்படும். பிறரின் செயல்பாடுகளை குறை சொல்வதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மிருகசீரிடம் : செயல்பாடுகளில் கவனம் தேவை.
திருவாதிரை : சுப விரயம் உண்டாகும்.
புனர்பூசம் : அமைதி வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். தொழில் சார்ந்த போட்டிகளை சமாளிப்பீர்கள். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். புண்ணிய செயல்களுக்கு உதவி செய்வீர்கள். மகான்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
பூசம் : மந்தத்தன்மை உண்டாகும்.
ஆயில்யம் : ஆசீர்வாதம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். ஆராய்ச்சி பணியில் எண்ணிய முடிவு கிடைக்க காலதாமதமாகும். கடல் மார்க்க பணிகளில் மந்தமான நிலை அமையும். வாக்குவாதங்களில் நிதானம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூரம் : காலதாமதம் உண்டாகும்.
உத்திரம் : முடிவுகளில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
புதிய வீடு கட்டுவதற்கான சாதகமான சூழல் அமையும். உறவுகளில் இருந்த இடைவெளிகள் குறையும். தாயாரின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். தொழிலில் உங்களின் திறமைகள் வெளிப்படும். கீர்த்தி உண்டாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : கீர்த்தி உண்டாகும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பொதுச்சேவையில் உள்ளவர்களுக்கு விவேகம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : புதிய சிந்தனைகள் தோன்றும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய நபர்களின் ஆதரவால் முன்னேற்றமான சூழல் நிலவும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் நிமிர்த்தமாக அரசாங்க அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : முன்னேற்றமான சூழல் நிலவும்.
கேட்டை : இன்பமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
இணையதளம் சார்ந்த பணிகளில் ஆதரவான நிலை அமையும். பொருட்சேர்க்கை உண்டாகும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். சபையில் ஆதரவு அதிகரிக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும் மற்றும் உயர்வு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : தனலாபம் உண்டாகும்.
உத்திராடம் : உயர்வு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். தொழிலில் புதிய வகை யுக்திகளை கையாளுவீர்கள். சொந்த ஊர் பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திராடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : மாற்றம் உண்டாகும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
தொழிலில் நீங்கள் செய்யும் சில மாற்றங்களால் இலாபம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.
சதயம் : அன்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
திட்டமிட்ட பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். இளைய உடன்பிறப்புகளால் அமைதியற்ற சூழல் நிலவும். பணிபுரியும் இடங்களில் மேன்மையான நிலை உண்டாகும். உங்களின் பொறுமையான குணத்தால் எதிரிகளை வெல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும்.
உத்திரட்டாதி : மேன்மையான நாள்.
ரேவதி : ஜெயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
