*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_தை 18_*

*_01.02.2019_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

சுயதொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் சாதகமான சூழல் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : எண்ணங்கள் மேலோங்கும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : இலாபகரமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். செய்யும் பணியில் சிலரின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடலாம். அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : முடிவுகளில் கவனம் தேவை.
ரோகிணி : வாய்ப்புகள் அமையும்.
மிருகசீரிடம் : அனுபவம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும். எடுத்த காரியத்தை நிறைவேற்ற காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தொழிலில் தனவரவுகள் தாமதப்படும். வாகனத்திற்கான பராமரிப்பு செலவுகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : சுபச்செலவுகள் உண்டாகும்.
திருவாதிரை : இழுபறிநிலை உண்டாகும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளுக்கிடையே அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : இன்பமான நாள்.
ஆயில்யம் : விருப்பங்கள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். தனவரவுகள் மேம்படும். விரைவில் முடியும் என எதிர்பார்த்த காரியம் காலதாமதமாகும். குழப்பமான சூழ்நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : தேவைகள் நிறைவேறும்.
பூரம் : வாதங்களை தவிர்க்கவும்.
உத்திரம் : செயலில் காலதாமதம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தாய்வழி உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புத்திரர்களின் மூலம் சுபச் செய்திகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான தன உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அன்பு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பணியில் திருப்திகரமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : அன்பு அதிகரிக்கும்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தொழில் சம்பந்தமான செயல்கள் முடிவடைய காலதாமதமாகும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பிறரிடம் தொழில் சார்ந்த விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : திறமைகள் வெளிப்படும்.
கேட்டை : தனவரவு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். எண்ணங்களில் தெளிவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : அன்பு அதிகரிக்கும்.
பூராடம் : இலாபம் உண்டாகும்.
உத்திராடம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

எதிர்காலப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தன்னம்பிக்கை மேலோங்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வழக்குகளில் நிதானம் வேண்டும். பூர்வீக சொத்துகளால் சுபச் செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.
திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

வெளியூர் வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். எடுத்தச் செயலை முடிப்பதில் இழுபறிகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வாக்குவாதங்களால் இலாபம் உண்டாகும். நட்பு வட்டம் அதிகரிக்கும். தொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : கலகலப்பான நாள்.
பூரட்டாதி : நட்பு வட்டம் பெருகும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

வீண் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிக்க முயல்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். புத்திக்கூர்மையால் பாராட்டப்படுவீர்கள். உறவினர்களின் மூலம் தொழில் வகை ஆதாயம் உண்டாகும். புதிய வீடு கட்டுவதற்கான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

பூரட்டாதி : செலவுகள் குறையும்.
உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•