☘☘முத்தமிழ் டிவி☘☘
இன்றைய ராசிபலன்கள்?
☘ புதன் ☘ 02.01.2019.விளம்பி – மார்கழி.18.
⚡மேஷம்
பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வெளியூர் தொழில் முயற்சிகளில் சுமாரான பலன்கள் கிடைக்கும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அசுவினி : விமர்சனத்தை தவிர்க்கவும்.
பரணி : அனுசரித்துச் செல்லவும்.
கிருத்திகை : வாதங்களை தவிர்ப்பது நல்லது.
⚡ரிஷபம்
கடல் மார்க்க பணிகளால் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். அறச்செயல்களால் கீர்த்தி உண்டாகும். சுபச் செய்திகள் வந்தடையும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். திருமண வரன்கள் கைக்கூடும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : தனலாபம் கிடைக்கும்.
ரோகிணி : சுபச் செய்திகள் வந்தடையும்.
மிருகசீரிஷம் : திருமண வரன்கள் கைக்கூடும்.
⚡மிதுனம்
வருங்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். புத்துணர்ச்சியான நாள். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : தடைகள் நீங்கும்.
⚡கடகம்
அஞ்ஞான சிந்தனைகள் மேலோங்கும். எதிர்காலத்திற்கு தேவையான செயல்பாடுகளை வகுப்பீர்கள். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற நட்பு நிலை உண்டாகும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூசம் : பொறுமையுடன் இருக்கவும்.
ஆயில்யம் : எச்சரிக்கை வேண்டும்.
⚡சிம்மம்
எதிர்பார்த்த தனவரவுகளில் காலதாமதம் உண்டாகும். பிறருக்கு உதவுதலில் நிதானம் வேண்டும். நீண்ட கால பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்
மகம் : காலதாமதமாகும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
⚡கன்னி
நண்பர்களுடன் நட்பு நிலை மேலோங்கும். தொழில் முனைவோர்கள் வேலையாட்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். தந்தையின் ஆதரவால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : நட்பு நிலை மேலோங்கும்.
அஸ்தம் : விவேகம் வேண்டும்.
சித்திரை : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
⚡துலாம்
விவசாயிகளுக்கும், தானியங்களை விற்பவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். வெளிநாட்டு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : சேமிப்பு அதிகரிக்கும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
⚡விருச்சிகம்
மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். வர்த்தகங்கள் தொடர்பான பணிகளால் இலாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய நட்பு கிடைக்கும். மனதில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : அறிவாற்றல் மேம்படும்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : காரியசித்தி உண்டாகும்.
⚡தனுசு
தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் சார்ந்த பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். உறவினர்களால் சுபவிரயம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : வெற்றி கிடைக்கும்.
உத்திராடம் : தேடல் உருவாகும்
⚡மகரம்
நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
திருவோணம் : கவலைகள் குறையும்.
அவிட்டம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
⚡கும்பம்
நண்பர்களின் மூலம் அரசாங்கத்தில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். விவாதங்களை தவிர்ப்பதால் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். எண்ணிய முயற்சிகள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
⚡மீனம்
வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் துறையில் உள்ளவர்கள் புகழப்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : தனவரவுகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
ரேவதி : கீர்த்தி உண்டாகும்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
