இன்றைய ராசிபலன்கள்?
?செவ்வாய்♦03.07.2018♦விளம்பி − ஆனி.19.

⚡மேஷம்

எதிர்பார்த்த கடனுதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். திருமணத்திற்கான வரன்கள் அமையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : ஆரோக்கிய குறைகள் நீங்கும்.
பரணி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
கிருத்திகை : பயணங்களால் நன்மை உண்டாகும்.

⚡ரிஷபம்

வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பொருள் சேர்ப்பதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பணி சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். அந்நியர்களின் உதவிகளால் பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : எண்ணங்கள் மேலோங்கும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.

⚡மிதுனம்

உயர்கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவியிடம் புரிதல் உணர்வு அதிகரிக்கும். செய்யும் புதிய முயற்சிகளால் கீர்த்தி உண்டாகும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : கீர்த்தி உண்டாகும்.
புனர்பூசம் : வெற்றி பெறுவீர்கள்.

⚡கடகம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
ஆயில்யம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

⚡சிம்மம்

பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். நீண்ட கால நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : இன்னல்கள் குறையும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

⚡கன்னி

கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் மேம்படும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். சக ஊழியர்களிடம் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : தனவரவுகள் மேம்படும்.
அஸ்தம் : இலாபம் உண்டாகும்.
சித்திரை : வாய்ப்புகள் அமையும்.

⚡துலாம்

தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். எண்ணிய செயலில் காரியசித்தி உண்டாகும். சொந்த ஊர் பயணங்களால் ஆதரவு உண்டாகும். அறிவுக்கூர்மையால் பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

சித்திரை : கலகலப்பான நாள்.
சுவாதி : காரியசித்தி உண்டாகும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

⚡விருச்சகம்

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்கள் விரைவில் முடியும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : சுபமான நாள்.
கேட்டை : செயல்பாடுகள் மேலோங்கும்.

⚡தனுசு

பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். பொருளாதாரத்தில் மேன்மையான சூழல் அமையும். தொழில் சம்பந்தமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அனுபவ ரீதியான தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மூலம் : சேமிப்பு உயரும்.
பூராடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திராடம் : புதிய நுட்பங்களை கற்பீர்கள்.

⚡மகரம்

எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகளால் சாதகமான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : ஆசைகள் நிறைவேறும்.
அவிட்டம் : பொருளாதாரம் மேம்படும்.

⚡கும்பம்

வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும். சம வயதினருடன் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : சுபிட்சமான நாள்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

⚡மீனம்

உத்தியோகஸ்தரர்களுக்கு பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்களின் புத்திக்கூர்மை புலப்படும். தந்தையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். பணியில் உள்ள தலைமை அதிகாரிகளின் ஆதரவால் சில செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அறிவுக்கூர்மை புலப்படும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.