*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆவணி 21_*

*_06.09.2018_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். உயர்கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அசுவினி : ஆதரவான நாள்.
பரணி : இலாபம் கிடைக்கும்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : சாதகமான சூழல் அமையும்.
ரோகிணி : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

கலை சார்ந்த அறிவு மேம்படும். அரசாங்கத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : கலை சார்ந்த அறிவு மேம்படும்.
திருவாதிரை : நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.
புனர்பூசம் : இலாபம் அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். சுபச் செய்திகளால் சுப விரயம் உண்டாகும். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பிறருக்குத் தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
பூசம் : சுப விரயம் உண்டாகும்.
ஆயில்யம் : அனுகூலமான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் தெளிவு பெறும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
பூரம் : வழக்குகள் முடிவுக்கு வரும்.
உத்திரம் : நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடங்கும். பூமி விருத்திக்கான பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எடுத்துச்செல்லும் உடைமைகள் மீது கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : எதிர்ப்புகள் அடங்கும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

நினைத்த காரியம் ஈடேறும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். சில குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : நினைத்த காரியம் ஈடேறும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : திருப்தியான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதார உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். மனைகள் மூலம் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : தேவைகள் பூர்த்தியாகும்.
அனுஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
கேட்டை : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

குடும்ப உறுப்பினர்களின் எண்ணமறிந்து செயல்படுவீர்கள். நிலுவையில் இருந்த பணவரவுகள் வசூலாகும். சாதுர்யமான பேச்சுகளால் அனைவரையும் கவர்வீர்கள். எதிர்பாராத தனவரவுகள் மகிழ்ச்சியைத் தரும். பயணங்களால் புத்துணர்ச்சி உண்டாகும். அக்கம், பக்கம் வீட்டார்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். சந்திராஷ்டம தினம் என்பதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : பிறரின் எண்ணமறிந்து செயல்படுவீர்கள்.
பூராடம் : பணவரவுகள் வசூலாகும்.
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

திருமண முயற்சிகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். உயர் அதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
திருவோணம் : புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
அவிட்டம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். செய்யும் செயல்களை தாமதமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : தெளிவு உண்டாகும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

எண்ணிய செயல்களை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பார்த்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். புதுவிதமான எண்ணங்களால் மனதில் சஞ்சலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•