*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
~~~அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்~~~
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஐப்பசி 20_*
*_06.11.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
சுயதொழிலில் எதிர்பாராத இலாபமும், ஆதரவும் உண்டாகும். தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : அனுகூலம் உண்டாகும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
கூட்டாளிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். திடீர் யோகத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். போட்டிகளில் வெற்றிக்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
ரோகிணி : மாற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் : சாதகமான நிலை அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
கல்வி சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதரர்களால் சாதகமான நிலை அமையும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்
மிருகசீரிடம் : பதவி உயர்வு கிடைக்கும்.
திருவாதிரை : நற்பெயர் உண்டாகும்.
புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
கால்நடைகளால் சுபவிரயம் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். மனதில் தோன்றும் பல்வேறு குழப்பங்களினால் சோர்வு உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். தொழில் சார்ந்த முதலீடுகளில் பெரியவர்களிடம் தகுந்த ஆலோசனையை பெற்று முடிவு எடுக்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : சுபவிரயம் உண்டாகும்.
பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
ஆயில்யம் : பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மூத்த சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூரம் : அமைதியை கடைபிடிக்கவும்.
உத்திரம் : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களினால் சுபவிரயம் உண்டாகும். கூட்டாளிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை
உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.
சித்திரை : கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். தொழிலில் உங்களின் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : நம்பிக்கை மேலோங்கும்.
சுவாதி : மாற்றமான நாள்.
விசாகம் : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பங்காளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். தாய்மாமன் உறவுகளிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் குறைந்து அன்பு மேம்படும். வாதத்திறமையால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் பொருளாதார மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
விசாகம் : மேன்மை உண்டாகும்.
அனுஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
கேட்டை : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
கடிதத்தின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். தூர தேசப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மூலம் : பொருட்சேர்கை உண்டாகும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் கீர்த்தி உண்டாகும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் மேன்மையான சூழல் அமையும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : சிந்தனையில் மாற்றம் ஏற்படும்.
திருவோணம் : பணியில் மேன்மை உண்டாகும்.
அவிட்டம் : எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
எதிர்கால இலக்குகளின் முடிவுகளால் சிந்தனையில் மாற்றம் ஏற்படும். புதிய செயல்திட்டத்தை அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.
சதயம் : புதிய செயல்திட்டம் அமைப்பீர்கள்.
பூரட்டாதி : சேமிப்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழிலிற்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பேச்சில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.
உத்திரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
ரேவதி : பேச்சில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
