அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியதால் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்கள் கைது

சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் சரகம் புதிய பேருந்து நிலையத்தில் 26/03/19ஆம் தேதி இரவு பாண்டிச்சேரியில் இருந்து சேலம் வந்த பேருந்தின் ஓட்டுனர் திரு.கருணாநிதி என்பவரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதில் காயம் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பேருந்து ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில்  காவல் ஆய்வாளர் திரு. சாலைராம் சக்திவேல் அவர்கள் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு பேருந்து ஓட்டுனரை தாக்கிய குற்றவாளிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த (1)அப்பாஸ், (2)ஜீவா  மற்றும் (3)  கலைச்செல்வன். ஆகியோர்களை 27/03/19ஆம் தேதி அதிகாலை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தார். சிறப்பாக செயல்பட்ட பள்ளப்பட்டி காவல் ஆய்வாளரை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்.