காணாமல் போன பெண் மற்றும் குழந்தைகளை கண்டுபிடித்துக் கொடுத்த மாநகர போலீசாருக்கு பாராட்டு

சேலம் மாநகரம் டவுன் காவல் நிலையத்தில் 12.03.19ஆம் தேதி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் திரு. சரவணன் அவர்கள்  வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு அவரது தலைமையில் SI  திரு. சுந்தரம், SSI திரு.வெங்கடேசன், SSI திரு. பெருமாள் ஆகியோர்கள் அடங்கிய  குழுவினர் மாநகர சைபர் கிரைம் உதவியுடன் 28.03.19 ஆம் தேதி பென்னாகரம் அருகே தங்கியிருந்த பெண் மற்றும் குழந்தைகளை மீட்டு  வந்து  கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் ஒப்படைத்தனர். மேற்கண்ட வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த சேலம் டவுன் காவல் நிலைய போலீசாரை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்.