16.05.2020 தமிழியக்கம் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக கொரானா என்னும் கொடிய நோயினால் தனது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளியோருக்கு மாநகர காவல் துறையுடன் இணைந்து 123 குடும்பத்தினருக்கு அரிசி மளிகை பொருட்கள் காய்கறி வகைகள் கீரை வகைகள் என ஐம்பெரும் பொருட்கள் அடங்கிய உணவு பொருள்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதியரசர் கே வி சக்திவேல் அவர்களின் தலைமையில் ஓ டெக்ஸ் எம்.ஏ இளங்கோவன், மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தை சேர்ந்த ஆர் வி பாபு, விஜய்ஆனந்த், தேவராஜ், சுகுமார்,கந்தசாமி,கோகுல் இவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையர்  பாலசுப்ரமணி, தெற்கு சரக சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன், மற்றும் செவ்வாபேட்டை காவல் ஆய்வாளர் சுந்தராம்பாள் இவர்களின் திருக்கரங்களால் அனைத்து குடும்பத்தினருக்கும் கொரானா பேரிடர் நிவாரண பொருட்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து வழங்கப்பட்டது.

சேலம் சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்ள இந்த பேஜ்சை லைக் செய்யவும்

https://www.facebook.com/oursalem24x7/