24 4 2020 மதியம் 12 மணி அளவில் சேலம் மாநகர காவல் துறை, சேலம் மாவட்ட தமிழ் இயக்கம் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் இணைந்து சேலம் தெற்கு சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மிகவும் வறுமையில் கஷ்டப்படும் ஏழை எளிய 17 குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி, 1500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள், 10 வகையான காய்கறிகள்,

சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் A.சரவணன் முன்னிலையில் சேலம் தெற்கு சரக காவல் உதவி ஆணையர் பூபதி ராஜா தலைமையில் தமிழியக்கம் இளங்கோவன் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் கழக ஆர்வி பாபு அவர்களின் ஏற்பாட்டில் ஒரு மாதத்திற்கு தேவையான 17 பயனாளிகள் குடும்பத்திற்கும் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சமூக இடைவெளிவிட்டு பயனாளிகள் அனைவரும் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை பெற்று சென்று சேலம் மாநகர காவல் துறைக்கும் மற்றும் தமிழ் இயக்கத்திற்கும் மக்கள் சட்ட உரிமைகள் கழகத்திற்கும் மனம் குளிர்ந்து நன்றி தெரிவித்து விட்டு சென்றனர். விழாவின் முடிவில் அன்னதானபட்டி உதவி ஆய்வாளர்க்கு நன்றியுரை ஆற்றினார்.